அதிர்ச்சி - கிருஷ்ணகிரியில் ரெயில் மோதி பெண் போலீஸ் உயிரிழப்பு.!
women police died train accident in krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவ மூர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா. இவர் கிருஷ்ணகிரி அடுத்த கந்திக்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மேரி ஸ்டெல்லா.
இவர் இன்று காலை வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து பேருந்தில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார். நேரம் ஆனதால் மெரி ஸ்டெல்லா செல்லும் சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆலப்புழையில் இருந்து தன்பாத்து வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேரி ஸ்டெல்லா மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த மேரி ஸ்டெல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு துணை காவல் ஆய்வாளர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
women police died train accident in krishnagiri