போலீஸ் போல நடித்து பணபறித்த பெண் போலீஸின் காதலன் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து இளம்பெண் ஒருவருடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வழிமறித்த நபர் ஒருவர் தன்னை போலீஸ் என கூறி இளம் பெண்ணுடன் வந்ததை பெற்றோரிடம் கூறி விடுவேன் என மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் அனுப்ப சொல்லியுள்ளார்.

அதன் பின்னர் பணத்தை அனுப்பிய பிறகு விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த நாள் அதே நபர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிப்பேன் என கூறி ரூ.65,000 பணத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் மொத்தமாக 92 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை ஆகியவற்றை வாங்கியுள்ளார்.

போலீஸ் என கூறிய தொடர்ச்சியாக பணம் கெடுதல் சந்தேகம் அடைந்த மணிகண்டன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த சிசிடிவி வீடியோ மூலம் கண்காணித்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் சூளைமேடு பெண் காவலரின் இரு சக்கர வாகனம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பெண் காவலரிடம் விசாரணை நடத்தியதில் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது பெண் காவலரின் காதலன் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது.

இதில் பாலாஜி கடந்த 2016ம் ஆண்டு முதல் ஊர்காவல் படையில் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வேலையை விட்டு நின்ற பாலாஜி பெண் போலீசை காதலித்து வந்த நிலையில் வேலை கிடைக்காத காரணத்தால் அவர் இதுபோன்ற பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாலாஜியை 5 பிரிவுகளுக்கு வழப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women police husband arrested in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->