மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு.!
Womens 1000 rupees Last day of special camp
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்து விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதில் முதற்கட்ட முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற நிலையில், 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்ற நிலையில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் கடந்த 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 36,000 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று, முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்காதவர்கள் இன்று மறக்காமல் இந்த சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Womens 1000 rupees Last day of special camp