ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணியில் 3400 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த டோக்கனில் யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து ரேஷன் கடைகளில் தமிழில் அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் உள்ள ஒரு மகளிருக்கு மட்டுமே இந்த தொகை அரசு வழங்க உள்ளது.

விண்ணப்பம் வழங்கப்படும் போதே விண்ணப்பத்துடன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் இடம், நேரம், நாள் ஆகியவை அடங்கிய டோக்கன் இணைத்து வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens 1000 rupees scheme application from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->