இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம்கள்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பெறும் சிறப்பு முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகைக்கான முதல்கட்ட விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைகான விண்ணப்பங்கள் கடந்த 20ஆம் தேதி முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் நடைபெற உள்ளது.

அதன்படி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் 21,031 முகங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை இந்த முகங்கள் நடைமுறையில் இருக்கும். அதன் பின்னர் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும்.

இதில் விண்ணப்பம் கிடைக்கப் பெறாத தகுதி வாய்ந்த பெண்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens 1000 rupees scheme camp from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->