மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. 3 நாட்கள் சிறப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்து விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இதில் முதற்கட்ட முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற நிலையில், 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்ற நிலையில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 36,000 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று, முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens 1000 scheme last chance apply


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->