அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை....தளர்த்தப்படும் விதிமுறைகள்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிட்டத்தில் கீழ், சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் பெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளது.

அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் இருக்க வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய்நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்  உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. 

இந்த நிபந்தனைகளால் பல பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும்,  எனவே இந்த நிபந்தனைகளை தளர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.

 இந்த நிலையில் கலைஞர் உரிமைத்திட்டம் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனால் இந்த நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என்றும், அதன்படி ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கலாம் என்று திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 15-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இதுபற்றி தெரிய வரும். இதற்கிடையில் இந்த திட்டத்தில் புதிதாக சிலரை சேர்க்க விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens rights amount for all women relaxed norms


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->