விடுதியை காலி செய்யுங்கள்.. திடீர் அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் - சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு படிப்பு மற்றும் வேலைக்காக செல்லும் பெண்கள் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி வருகின்றனர். இதற்காக நகரின் பல பகுதிகளில் விடுதிகள் இயங்கி வருகின்றது.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள தெருவில் அதே பகுதியை சேர்ந்த உமா ஆனந்தி என்பவர் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தார். இந்த நிலையில், அந்த கட்டிடத்தின் உரிமையாளாருக்கும் வாடகைதாரருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கட்டிடத்தை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவையடுத்து மகளிர் அறையில் தங்கியிருந்த அனைவரையும் வரும் திங்கள் கிழமைக்குள் காலி செய்யுமாறு உமா ஆனந்தி கூறியுள்ளார். திடீரென அறையை காலி செய்ய சொன்னதால், விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அவகாசம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens strike for vacate hostel suddenly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->