காதலர் தினத்தில் காதலிக்கு பரிசு கொடுக்க பணம் இல்லாததால் ஆடு திருடிய இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


 காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பிரிஞ்சி மேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 20) என்ற இளைஞரும், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 20) என்ற 2 பேரையும் ஆடு திருடியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காதலர் தினத்தை கொண்டாடவும் காதலிக்கு பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆடு திருடியதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young boys theft goat and selling money celebrate valentine's day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->