கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.! இளம்பெண் கழுத்தறுத்து எரித்துக்கொலை... போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளம்பெண் கழுத்தறுத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.கொளத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து பாதி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கழுத்தறுத்து எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl was strangled and burnt to death in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->