கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது.!
young man arrested for attack peoples in kanniyakumari
கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய வலைபர் கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனியில் நேற்று இரவு ஆக்னல் என்ற வாலிபரை ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து ஜெப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்துச் சென்று விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு வங்கி முன்பு வந்து நின்றுள்ளனர்.
அப்போது அந்த வங்கியில் ஏடிஎம் மிஷின் மூலம் தனது தாய்க்கு பணம் அனுப்ப வந்த கன்னியாகுமரி ஹைகிரவுன்ட் பகுதியைச் சேர்ந்த மீனவர் மோகன் தாஸ் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.
அத்துடன் அவரையும் அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி, படுகாயமடைந்த இருவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதை அடுத்து போலீசார் குற்றவாளியான ஜெப்ரினை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது ஜெப்ரின் போலீஸாரிடம் இருந்து தப்பி ஓட முயன்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். அவரையும் போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
English Summary
young man arrested for attack peoples in kanniyakumari