திருநெல்வேலி அருகே பரபரப்பு : கூலி தொழிலாளியை அறிவாளால் வெட்டிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை அறிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (55). இவருடைய மகன் ராசுக்குட்டி மற்றும் மருமகன் மாவீரன் ஆகிய இரண்டு பேரும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பவரின் தம்பியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தகராறு முற்றிய நிலையில் ராசுகுட்டியின், மாவீரனும் சேர்ந்து இசக்கி முத்துவின் தம்பி கையை கடித்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்த இசக்கிமுத்து இது தொடர்பாக தகராறு செய்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக கிருஷ்ணமூர்த்தியை வெட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை அறிவாளால் வெட்டிய இசக்கிமுத்துவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for hacking a laborer with sickle in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->