கோவை || கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 20ஆம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய், மகளை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து மாணவி குணமடைந்து வீட்டிற்கு வந்ததையடுத்து அவரது தாய், மாணவியிடம் எதற்காக தற்கொலை செய்து கொள்ள முயன்றாய் என்று கேட்டுள்ளார்.

இதற்கு மாணவி, தான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஊர் திருவிழாவில் திருப்பூர் மாவட்டம், ஈச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி கூட உரிமையாளர் மோகன் குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அவரிடம் நான் அடிக்கடி செல்போனில் பேசி நாங்கள் காதலித்து வந்தோம்.

இதையடுத்து மோகன் குமார், தன்னை பாட்டி வீட்டிற்கு வருமாறு கூப்பிட்டார். வரவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக என்னை மிரட்டினார். இதனால் பயந்த நான் அங்கு சென்றேன். அப்பொழுது அங்கு மோகன் குமார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்பு அந்த போட்டோவை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை மிரட்டி, மூன்று முறை காரில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து தொடர்ந்து அவர் என்னை மிரட்டி வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மோகன் குமாரை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for threatening and raping college student in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->