கொலைக் களமாக மாறிய சைதாப்பேட்டை ரெயில் நிலையம் - அச்சத்தில் பொதுமக்கள்.!   - Seithipunal
Seithipunal


கொலைக் களமாக மாறிய சைதாப்பேட்டை ரெயில் நிலையம் - அச்சத்தில் பொதுமக்கள்.!  

சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் இன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், "விஜய் வேலை கிடைக்காத விரக்தியிலும், மனைவியை பிரிந்த சோகத்திலும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமோசா வியாபாரியான ராஜேஷ்வரி என்ற பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide front of train in saithapet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->