ரயிலில் செல்பவர்கள் உஷார்! காபியில் மயக்க மருந்து! உடைமைகள் கொள்ளை! இளம்பெண் கைது!
Young woman arrested for robbing passengers by giving anesthetic in coffee on express train
சென்னை : எக்ஸ்பிரஸ் ரயிலில் காபியில் மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் கொள்ளையடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கிறது. இந்தநிலையில் மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் தன்வந்திரி என்பவர் பயணம் செய்தார். அப்போது ரயிலில் அவருக்கு எதிரே பயணம் செய்த இளம் பெண் ஒருவரிடம் தன்வந்திரி நட்பாக பேசி பழகி உள்ளார்.
இந்தநிலையில், ரயிலில் தாம்பரத்திற்கு வந்தபோது அந்த இளம் பெண் தன்வந்திரிடம் காப்பி வாங்க செல்கிறேன். " உங்களுக்கு காப்பி வேண்டுமானால் கேட்டுள்ளார்" . தன்வந்திரியும் காப்பி வாங்கி வர சொல்லி உள்ளார். காப்பியை குடித்த தன்வந்திரிக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. பின்னர் எழும்பூர் ரயில் நிலையத்தில் எழுந்து பார்த்தபோது தன்வந்திரியின் லேப்டாப் மற்றும் உடைமைகள் காப்பி வாங்கி கொடுத்த இளம் பெண்ணையும் காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தன்வந்திரி எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் கழித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்ணகி என்ற இளம் பெண் பயணம் செய்தார். அவருக்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் ஒருவர் தங்க சங்கிலியை திருடி சென்று மாயமானார். இதுகுறித்து கண்ணகி எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த இரண்டு திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதால் குற்றவாளியும் ஒருவராக தான் இருக்கும் வரை எனப் போலீசார் சந்தேகப்பட்டனர். விசாரணையின் போது போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டினார்.
இதை அடுத்து போலீசார் அந்த பெண்ணின் பி.என்.ஆர் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் கோடச்சேரி பகுதியை சேர்ந்த பூமிகா என்பது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் பூமிகா டிக்கெட் பதிவு செய்து கொடுத்த முகவரிக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு தன்வந்திரி மற்றும் கண்ணகியுடன் திருடப்பட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பூமிகாவை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
English Summary
Young woman arrested for robbing passengers by giving anesthetic in coffee on express train