கபிஸ்தலம் அருகே சோகம் - இளம்பெண்ணின் உயிருக்கு எமனாய் வந்த செல்போன்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கபிஸ்தலம் அருகே சோகம் - இளம்பெண்ணின் உயிருக்கு எமனாய் வந்த செல்போன்.! நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கோகிலாம்பாள். இவருடைய கணவர் பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இதனால், கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே கொத்த தெரு பகுதியில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், கோகிலாம்பாள் நேற்று மதியம் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசிக்கொண்டு இருந்தார். 

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து கடை தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகிலாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman died for cell phone explossion in kabisthalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->