சேலம் || பரப்புரைக்கு பாம்புடன் வந்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் செல்வகணபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் ஒருவர், வயல்வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றைப் பிடித்து, கழுத்தில் போட்டுக் கொண்டு இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றிப் பாம்பை பிடித்துக் கொண்டே தேர்தல் பரப்புரை நடந்த பகுதிக்கு வந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் சிதறி ஓடியுள்ளனர். உடனே அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அந்த இளைஞரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இருப்பினும் பிரசாரம் முடியும் வரை அந்த இளைஞர் அதே பகுதியில் வலம் வந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தனிப்படையினர் பாம்பைப் பிடித்து வைத்திருந்த இளைஞரைத் தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பதும், உறவினர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு வயலில் திரிந்த சாரை பாம்பைப் பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அரவிந்த் குமாரைச் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, 14 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for come election campaighn with snake in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->