சரக்கு கேட்டா தரமாட்டியா..? டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மதுபான கடையில் நேற்று இரவு சின்ன போரூரை சேர்ந்த கதிரவன் என்பவர் மது வாங்க சென்றுள்ளார். அப்பொழுது டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ராஜேந்திரன் என்பவர் நேரம் முடிந்து விட்டதால் கடையை மூடிவிட்டு மதுபானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் விற்பனையாளரிடம் கதிரவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கதிரவன் திரும்பிச் சென்ற நிலையில் மூடி இருந்த டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். 

இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வீசிய கதிரவனை மறக்க பிடித்த டாஸ்மாக் ஊழியர்கள் வளசரவாக்கம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதனை அடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for throwing petrol bomb on Tasmac shop in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->