உதவிசெய்வதுபோல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பல லட்சத்தை சுருட்டிய வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பல லட்சத்தை சுருட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம், காங்கேயம், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியோர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் மடவூர் புகையிலைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் நடித்து ஏடிஎம்க்குள் சென்று அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது நடித்து அவர்கள் ஏடிஎம் கணக்கில் உள்ள பணத்தை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

முதியர்களிடமிருந்து வாங்கும் ஏடிஎம் கார்டை அவர் வைத்துக் கொண்டு அதற்கு பதிலாக போலியான ஏடிஎம் கார்டை முதியவர்களிடம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில் சந்தேகத்திற்கு இடமாக  நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் முதியவர்களின் ஏடிஎம் கார்டு மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. கடந்த பத்து மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்தது பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for withdrawing lakhs from ATM card of elderly people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->