மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தின் கீழ் கைதான வாலிபர்!
youth arrested under pocso act
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் (வயது 35). கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர் கணவர் இறந்த பிறகு அரக்கோணத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு ஏமாந்துள்ளார்.
இதன் பின்னர் மீண்டும் அவர் குழந்தைகளுடன் காஞ்சிபுரத்துக்கே வந்து வசித்து வந்த நிலையில் தினேஷ்குமார் என்ற வாலிபருடன் பேஸ்புக் மூலம் பழகி உள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த பெண்ணின் மகளான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது போன்ற செயலின் தினேஷ்குமார் பலமுறை ஈடுபட்டு வந்ததால் மாணவி என்ன செய்வது என தெரியாமல் அவரது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி தினேஷ் குமார் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested under pocso act