மதுரை || ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது..!
Youth arrested Who selling kanja
இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு உறுதியான தகவல் அளித்தனர். இதற்கிடையில், மதுரை ஜம்புரோபுரம் மார்கெட் பகுதியில் சிலர் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை விற்பனை செய்து வந்தனர்.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் ஆர்டர் எடுத்து மாணவர்களின் லோகேஷன் ஷேர் செய்து அதன் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth arrested Who selling kanja