திருப்பூர் || ஜூஸ் வர தாமதம் - ஆத்திரத்தில் வாலிபர்கள் செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


ஜூஸ் வர தாமதம் - ஆத்திரத்தில் வாலிபர்கள் செய்த விபரீத செயல்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேரங்காடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் சிடிசி கார்னர் பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு இரண்டு இளைஞர்கள் ஜூஸ் குடிப்பதற்காக வந்துள்ளனர். 

ஆனால், அங்கு ஜூஸ் கொடுக்க தாமதம் ஆகியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் இருந்த ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். அதன் பின்னர் அந்த வாலிபர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் இளைஞர்கள் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth attack juice shop for delay getting juice in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->