#வேலூர்: எருது விடும் திருவிழாவில் காளை முட்டியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் கிராமத்தில் எருது விழும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமத்தில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

அதேபோன்று பல்வேறு கிராமத்தில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த எருது விடும் திருவிழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் காலை ஓடும் பாதையில் நின்று கொண்டிருந்த குடியாத்தம் லிங்குன்றம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் மீது காளை மோதியது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காளை முட்டியதில் சுரேஷின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்த ஓட்டம் சீராக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். 

இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழா குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்து காளை விடும் திருவிழாவை நடத்தியும் பொதுமக்களும் இளைஞர்களும் சுயக்காட்டுப்பாட்டை மீறி இவ்வாறு நடந்து கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே பொதுமக்களும் இளைஞர்களும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புடன் எருது விடும் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth dies after bull bellowed in bull racing festival Vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->