கடலில் குளிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு..!
Youth drowns into Sea
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் திவன்.இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவருக்கு தேர்வு முடிந்த நிலையில் திருவனந்தபுரம் அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் வந்துள்ளனர்.
அப்போது, கோவளம் கடற்கரையில் 3 நண்பர்களோடு கடலில் திவின் குளித்துள்ளார். திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடன்வந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதற்கிடையில், திவினின் உடல் கோவளம் கரை ஒதுங்கியது. அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.