மதுரையில் பயங்கரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை.! டிரைவர் வெறிச்செயல் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வீடு புகுந்து வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் தனத்துவம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகன் கூலித்தொழிலாளி ஜெயக்குமார் (20). இவர்களது குடும்பத்தினருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் சோனைராஜ் (40) என்பவர் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் ஜெயக்குமார் சோனைராஜ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோனைராஜ், ஜெயக்குமாரின் வீடு புகுந்து ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் இதை தடுக்க வந்த ஜெயக்குமாரின் தந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ஜெயக்குமாரின் தந்தையை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து சோனைராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth hacked to murder after breaking into the house in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->