திருவிழாவுக்கு வந்த வாலிபர் - பிணமாக வீடு திரும்பிய கொடூரம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருவிழாவுக்கு வந்த வாலிபர் - பிணமாக வீடு திரும்பிய கொடூரம்.! போலீசார் விசாரணை.

சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் நேற்று மந்தைவெளியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழாவிற்குகு வந்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த தினேஷ், பார்த்திபன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்தத் தகராறில் பார்த்திபன், தினேஷை பலமாக தாக்கியதால், தினேஷ் பேச்சு, மூச்சு இல்லாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக பார்த்திபன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே தினேஷை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பார்த்துப்பான் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவிழாவில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder at temple festival in chennai mailapur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->