ஏடிஎம் மையத்தில் உதவுவது போல் நடித்து... ரூ.70 ஆயிரத்தை ஆட்டைய போட்ட வாலிபர்...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஏ.டிஎ.ம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூபாய் 70 ஆயிரத்தை ஆட்டைய போட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் செம்மினிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜெயா (22). இவர் வாடிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வாசலில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெயா தன்னுடைய ஏடிஎம் கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர், பணம் வரவில்லை என்று கூறி ஜெயாவிடம் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயா வங்கி கணக்கு புத்தகத்தை எடுக்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வாலிபர் ஜெயாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, இரண்டு முறை பத்தாயிரமும், மதுரையில் உள்ள நகைக்கடையில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு தங்க நகையும் வாங்கியுள்ளார்.

இதையறிந்த ஜெயா அதிர்ச்சடைந்து இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம் மையத்தில் உதவுவது போல் நடித்து ரூபாய் 70 ஆயிரத்தை ஆட்டைய போட்ட வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth stole Rs 70 thousand by pretending to help an ATM centre in madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->