பேஸ்புக்கில் ரீல்ஸ் போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் - வேலூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


பேஸ்புக்கில் ரீல்ஸ் போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் - வேலூரில் பரபரப்பு.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் நவீன் குமார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நவீன் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக நவீன் தனது முகநூல் பக்கத்தில், தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்துள்ளார். 

அத்துடன் இன்றைய தேதியிட்டு ஆர்பிஐ (RIP) என்று ரீல்ஸ் செய்து அதையும் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவலளித்தனர். 

அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து நவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நவீன் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth sucide after reels vedio share facebook in vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->