நகை-பணத்திற்கு ஆசை... மதுவில் "கொக்கு மருந்து" கலந்து பெரியப்பாவை கொன்ற வாலிபர்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகை, பணத்திற்க்கு ஆசைப்பட்டு மதுவில் கொக்கு மருந்து கலந்து கொடுத்து பெரியப்பாவை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோவிந்தன் (72). இவரது மகன் கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தன் நேற்று உயிரிழந்த நிலையில், இறுதி சடங்கிற்காக தந்தை வீட்டில் இருந்த பீரோவில் பணம் எடுக்க கிருஷ்ணன் சென்றுள்ளார். அப்பொழுது பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணன், தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் தம்பி மகனான அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (25) என்பவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. தனது பெரியப்பாவிடமிருந்த நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு, அவருக்கு மதுவில் கொக்கு மருந்து கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, ரூ.3.69 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை கொள்ளை அடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாஸ்கரனிடம் இருந்த பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth who murder father brother by mixing poison in alcohol for the sake of jewelry and money in kanchipuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->