கரூரில் பயங்கரம்: தண்ணீர் பிடிப்பதில் தகராறு.! பெண்ணை வெட்டி கொன்ற வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அறிவாளால் வெட்டி வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி பத்மாவதி(48). இந்த தம்பதியினருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே நேற்றும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த அறிவாளை எடுத்து இளங்கோ மற்றும் பத்மாவதியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இளங்கோக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கரூர் நகர போலீசார் பத்மாவதி அறிவாளார் வெட்டிக்கொன்ற கார்த்திகை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth who murder woman with sickle arrested in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->