சென்னையில் பரபரப்பு.."தனியார் பாரில் எஸ்.ஐ.யிடம் தகராறு செய்த போதை இளைஞர்கள்"..!! பின் தொடர்ந்து தாக்கிய துணிகரம்..!!
Youths argued with SI and brutally assaulted by car
சென்னையில் மது அருந்தும்போது காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சிவசங்கரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாருக்கு மது அருந்தச் சென்ற நிலையில் அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த சில இளைஞர்கள் தாங்கள் அருந்திய மதுவுக்கும் சேர்த்து பணம் கொடுக்குமாறு சிவசங்கரனிடம் கூறியுள்ளனர்.
அதற்கு சிவசங்கரன் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசங்கரன் மது அருந்துவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து தனது காரில் கோடம்பாக்கம் நோக்கி சென்றபோது அவரை 2 கார்களில் அதே இளைஞர்கள் பின் தொடர்ந்து உள்ளனர்.
சிவசங்கரனின் காரை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே மடக்கி அவரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிவசங்கரனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Youths argued with SI and brutally assaulted by car