சீறும் அலைகள் நடுவே செல்பி எடுக்கும் இளைஞர்கள்..!! காசிமேடு கடற்கரையில் இளசுகளின் அட்டகாசம்..!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. புயல் காரணமாக சென்னை கடற்கரை பகுதிகளில் 6 முதல் 10 அடி உயரம் அலைகள் எழுகிறது. இதனால் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்று கடற்கரை ஒட்டிய பகுதிகளுக்கு நடை பயிற்சி செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

காசிமேடு கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக ஐந்து அடி உயரத்துக்கு அலைகள் கிளம்பி தடுப்புகளை மீறி வார்ப்பு பகுதியில் விழுகிறது. வாப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கற்களின் மீது ஏறி ஆபத்தை உணராமல் காசிமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செல்பி எடுக்கின்றனர். 

சில பெற்றோர்களும் குழந்தைகளுடன் இணைந்து செல்பி எடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே காவல்துறையினர் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths taking selfies in front of raging waves at kasimedu beach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->