யுடியூப்பர் சவுக்கு சங்கர் அலுவலகம், வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.! - Seithipunal
Seithipunal


காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்த அவதூறு கருத்து வழக்கில் சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை போலீசார் கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர். 

கைது செய்த சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கஞ்சா வைத்திருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் கீழ் மதுரவாயில் பகுதியில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகர் அலுவலகத்தில் தேனி போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சவுக்கு சங்கருக்கு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா வீட்டில் கஞ்சா பொருட்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber Chavik Shankar office house police raided


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->