யூடியூபர் டிடிஎப் வாசன் செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்..மதுரை அண்ணாநகர் போலீசார் நோட்டிஸ்!!
YouTuber TDF Wasan 3 days notice to surrender cell phone
செல்போன் பேசியபடி கார் ஓட்டிய விவகாரம். பிரபல யூடியூபர் ஹாசன் தனது செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணாநகர் காவல் நிலையம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வது, சாகசங்கள் செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை அதிக இளம்வயதினர் பின்பற்றுகின்றனர்.
டிடிஎப் வாசன் தொடர்ந்து சர்சையில் சிக்கியும் பல வழக்குகளையும் வான்ட்டடாக வாங்கியும் வருகிறார். டிடிஎப் வாசன் தொடங்கிய வாகனங்கள் பாதுகாப்பு பொருள் நிறுவனம் ஆன்லைனில் இருந்து பொருட்களை வாங்கி அவரது நிறுவனத்தின் பெயரில் மாற்றி விற்பனை செய்வதாக சமூகவலைதளங்களில் புகார் எழுந்தது.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் அருகே சாகசம் செய்தபொது கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் டிடிஎப் வாசனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது.
இந்தநிலையில், செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். பின்னர், டிடிஎஃப் வாசன் தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் " இனி திருந்தி வாழ போவதாகவும் , வரும் ஜூன் 4 தேதி முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் ஜாமின் வழங்குமாறு வாதத்தை முன் வைத்தது. அதனை அடுத்து, மதுரை நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்போன் பேசியபடி காரை இயக்கிய வழக்கில் யூடியூபர் ஹாசன் தனது செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என மதுரை அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
English Summary
YouTuber TDF Wasan 3 days notice to surrender cell phone