போதை பொருள் கடத்தல் மன்னன்! ஜாபர் சாதிக்குக்கு நிபந்தனை ஜாமின்! - Seithipunal
Seithipunal


போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்ககுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விரோத பணம் பரிமாற்றம், வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து சட்டவிரோதமாக பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்தது. பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிலையில் அடைக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக்விற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை  தீவிர சோதனை நடத்தினர். ஜாபர் சாதிக்கு நெருக்கமாக இருக்கும் இயக்குனர் ஆமீர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். 
 ஜாபர் சாதிக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை அமலாக்கதுறையினர் திரட்டி வந்தனர்.

இந்தநிலையில், ஜாபர் சாதிக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்கு பல்வேறு நிபந்தனங்களுடன் ஜாமீன் வழங்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கு விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் திங்கள் கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கழகத்திட வேண்டும். செல்போன் எண்ணை அதிகாரிகளுக்கு வழங்கி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாற்றினால் அது குறித்த தகவலை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தில்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zafar Sadiq granted conditional bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->