சைவ உணவுக்கான சீருடையை திரும்பப் பெற்றது சோமேட்டோ - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமோட்டோ நேற்று சைவ உணவு விநியோகத்திற்கு என்று தனியாக பச்சை நிற சீருடை மற்றும் உணவு கொண்டு செல்லும் பெட்டியை அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ப்யூர் வெஜ் வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் சைவ உணவு விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் இந்த ப்யூர் வெஜ் செயலியில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் இடம்பெறும். அசைவ உணவுகளை வழங்கும் எந்தவொரு உணவகமும் இதில் இருக்காது. 

எங்களின் பிரத்தியேக ப்யூர் வெஜ் ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் உணவுகள் மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் ப்யூர் வெஜ் ஆப்ஷனில் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய சேவைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தற்போது இந்த சேவையை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தீபிந்தர் கோயல் இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சைவ உணவு உண்பவர்களுக்கான பிரத்யேக சேவையை தொடர போகிறோம் என்றாலும், அதற்கான பச்சை நிற சீருடை பயன்பாட்டு பிரிவினையை அகற்ற முடிவு செய்துள்ளோம். வழக்கமான டெலிவரி செய்பவர்கள் மற்றும் சைவ உணவு விநியோகம் செய்பவர்கள் ஆகிய இரு பிரிவு டெலிவரிமேன்களும் சிவப்பு நிற சீருடையையே அணிவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

zomato withdraw green dress for pure veg


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->