வேற லெவல் போன்...! புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் விவோ T3 Pro 5G ஐ விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்த விவோ T3 Pro 5G யின் அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது.

இந்நிலையில், விவோ T3 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும், பின்னர் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என்றும் விவோ நிறுவனம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைனில், இந்த விவோ T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் அமேசான் போன்ற விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதனை தொடர்ந்து, புதிய விவோ ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்கள் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3,000 தள்ளுபடி மற்றும் ரூ. 3,000 வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் 6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை செலுத்தும் முறையும் வழங்கப்படுகிறது.

இந்த விவோ T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய அம்சங்களை பொருத்தவரை விவோ T3 ப்ரோ 5ஜி மாடலில் 6.77 இன்ச் 2392x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

அதோடு, டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள விவோ T3 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா, 16MP செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டை் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, 5500 எம்ஏஹெச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இந்த மாரி விவோ T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை விவோ நிறுவனம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another level phone New vivo smartphone mode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->