ஆப்பிள் பயனர்களுக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை! எளிய இலக்கு... பாதுகாப்பே இல்லையாமே! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் ஐபோன் உபயோகப்படுத்தும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு ஒரு அதிர்ச்சி எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ஐபோன், ஐபாட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் சில சாதனங்களில் பயன்படுத்துபவர்களின் முக்கிய தகவல் கசிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் மிக எளிய இலக்காக உள்ளதாகவும், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் பைபாஸ் செய்து தகர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், Cause denial of service (DoS - சேவை மறுப்பு) குறைபாடு ஏற்படவும், spoofing தாக்குதல் மூலம் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

17.6 and 16.7.9க்கு முந்தைய iOS and iPadOS வெர்ஷன்கள்,
13.6.8க்கு முந்திய macOS Ventura வெர்ஷன்கள்,
12.7.6 க்கு முந்திய macOS Monterey வெர்ஷன்கள், 
10.6க்கு முந்திய watchOS வெர்ஷன்கள்,
17.6 க்கு முந்திய tvOS வெர்ஷன்கள், 
1.3 க்கு முந்தைய visionOS வெர்ஷன்கள், 
17.6 க்கு முந்தைய Safari ஆப்பிள் மென்பொருள் வெர்ஷன் பயன்பாட்டில் இருக்கும் சாதனங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple iPhones Security Central Govt Alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->