உறங்குவதற்கு முன்.. செல்போனை இப்படி செய்யாதீர்கள்.. உஷார்.!  - Seithipunal
Seithipunal


பலருக்கு, உறங்குவதற்கு முன் செல்போனை பயன்படுத்திவிட்டு தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டவாறு ஹெட்செட் பயன்படுத்தி பாட்டு கேட்பது அல்லது செல்போனில் நெருக்கமானவர்கள் உடன் பேசிக்கொண்டே உறங்குவது போன்ற பழக்கங்கள் இருக்கிறது.

சிலருக்கு இரவு நேரத்தில் செல்போனில் சார்ஜ் போட்டு அப்படியே தூங்கும் பழக்கமும் இருக்கிறது. இதெல்லாம், செல்போன் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். 

இரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது பெரிய அளவில் தவறு இல்லை என்று கூறினாலும் பேட்டரிகள் அதிகப்படியாக சூடேறும் காரணத்தால் செயல் திறனை இழக்கும் அபாயம் இருக்கிறது. 

ஒருவேளை செல்போன் பேட்டரி பழையது என்றால் அந்த பேட்டரி வெடித்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இரவு நேரங்களில் செல்போனை சார்ஜ் செய்வதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். 

அப்படி மறுநாள் சார்ஜ் செய்ய முடியாமல் எங்காவது வெளியில் செல்ல வேண்டிய நிலை இருந்தால், ஓரிரு மணி நேரத்திற்கு பிறகு அலாரம் அடிக்குமாறு வைத்துவிட்டு சார்ஜ் போடலாம். 

அலாரம் அடித்த பின்னர் எழுந்து சார்ஜை பிடுங்கி விட்டு மீண்டும் உறங்கலாம். நாம் சார்ஜ் செய்ய நமது செல்போனுக்கு உகந்த சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அதை விடுத்து மற்ற சார்ஜர்களை பயன்படுத்துவதனால், பேட்டரி விரைவில் காலாவதியாக கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell Phone users should Know these about battery Of mobile


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->