வாட்ஸ்அப்பில் அதிரடி புதிய அம்சங்கள் – பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அப்டேட்கள்! முழு தகவல்!
Exciting new features on WhatsApp updates that improve user experience
சமூக ஊடக உலகில் பெரும் இடம் பிடித்துள்ள வாட்ஸ்அப், தற்போது தனது பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்கள், அழைப்புகள் மற்றும் அப்டேட்ஸ் பகுதிகளில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவை, தகவல்தொடர்பு முறையில் வேகத்தையும் வசதியையும் வழங்குகின்றன.
1. ஆன்லைன் ஸ்டேட்டஸ் – குழு உரையாடல்களில் நேரடி தகவல்
குழு உரையாடல்களில் தற்போது யார் யார் ஆன்லைனில் உள்ளனர் என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் வசதி வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது. குழுவின் பெயரின் கீழ், அந்த நேரத்தில் இணையத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை காண முடியும்.
2. ஹைலைட்ஸ் – முக்கிய தகவல்களுக்கு முன்னுரிமை
குழு உரையாடல்களில் முக்கியமான அறிவிப்புகளை முன்னிலைப்படுத்தும் வசதியாக 'Highlights' என்ற விருப்பத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பிட்ட நபர்களின் mentions, பதில்கள் மற்றும் சேமித்துள்ள தொடர்புகளில் இருந்து வரும் செய்திகளை மட்டும் நோட்டிஃபிகேஷன்களாக பெற முடியும்.
3. RSVP – நிகழ்வுகளை திட்டமிட புதிய வசதி
வாட்ஸ்அப்பில் இப்போது நிகழ்வுகளை உருவாக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சம் மூலம் குழுக்களில் அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். இதற்கான RSVP விருப்பங்களில் ‘வருவேன்’, ‘ஒருவேளை’, ‘+1’ போன்ற தேர்வுகள் உள்ளன. நிகழ்வுகளுக்கு தேதி, நேரம் போன்ற விவரங்களைச் சேர்க்கவும், உரையாடலில் அதை pin பண்ணி வைக்கவும் வசதி உள்ளது.
4. மேலும் ஈமோஜிகள் மற்றும் iPhone பயனர்களுக்கான புதிய அம்சங்கள்
ஈமோஜி பதில்களுக்கான விருப்பங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. iPhone பயனர்களுக்காக, வாட்ஸ்அப்பில் documents ஸ்கேன் செய்யும் வசதியும், வாட்ஸ்அப்பை default மெசேஜிங் மற்றும் அழைப்பு செயலியாக அமைக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
5. மேம்பட்ட வீடியோ அழைப்புகள்
வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. iPhone பயனர்கள் video call-ல் zoom in செய்வதற்கான வசதி பெறுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் அழைப்பில் இருக்கும்போது, மற்ற உறுப்பினர்களை நேரடியாக சாட் திரையில் இருந்து அழைப்பில் சேர்க்கும் வசதியும் உள்ளது.
6. சேனல்களில் வீடியோ மற்றும் QR Code
அப்டேட்ஸ் பகுதியில், வாட்ஸ்அப் சேனல்களில் 60 வினாடிகள் வரை வீடியோ பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சேனல் நிர்வாகிகள் தங்கள் பின்தொடர்பவர்களுடன் வீடியோ கருத்துகளை பகிர முடிகிறது. மேலும், குரல் செய்திகளுக்கான டிரான்ஸ்கிரிப்ட் வசதி மற்றும் நேரடி அணுகலுக்கான தனிப்பட்ட QR குறியீடுகளும் வழங்கப்படுகின்றன.
வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சங்கள், தகவல்தொடர்பு முறையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், பயனர் அனுபவத்தையும் ஒரு புதிய கட்டத்திற்கு உயர்த்துகின்றன. குழு சாட்கள், நிகழ்வு ஏற்பாடுகள், சேனல் அப்டேட்ஸ் ஆகியவையில் இந்த புதுமைகள், WhatsApp-ஐ இன்னும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றுகின்றன.
English Summary
Exciting new features on WhatsApp updates that improve user experience