WiFi பாஸ்வேர்டை மறந்துடீங்களா?... உடனே இந்த டிரிக்கை பயன்படுத்துங்கள்.! - Seithipunal
Seithipunal


Wifi பாஸ்வேர்ட் மறந்து போச்சா? எப்படி கண்டுபிடிப்பது?

பாஸ்வேர்ட் (Password) என்றாலே அதை எப்போதும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது, குறிப்பாக பாஸ்வேர்ட்டை யாருக்கும் தெரியாமல் மிகவும் ஸ்ட்ராங் ஆக செட் செய்த நாம் அதை மறக்கவே கூடாது. 

ஆனால், நடைமுறையில் அப்படி நடக்காது. எப்படியானாலும் நாம் செட் செய்த பாஸ்வேர்டை சரியான நேரத்தில் மறந்துவிடுவோம். பெரும்பாலும், நம்முடைய வைஃபை பாஸ்வேர்ட்டை நாம் ஒருமுறை செட் செய்வதோடு அடுத்து அதை அதிகம் பயன்படுத்தமாட்டோம். 

இதனால், கட்டாயம் நம்முடைய வைஃபை பாஸ்வேர்டை நம்மில் பெரும்பாலானோர் மறந்திருக்க வாய்ப்புள்ளது. உங்கள் வைஃபை பாஸ்வேர்டை ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால், இனி உடனே இந்த டிரிக்கை பயன்படுத்துங்கள். 

ஆண்ட்ராய்டு போன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி? 

உங்கள் Anroid போனின் Settings ஓபன் செய்து Wifi & Network என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபை அல்லது சேவ் செய்யப்பட்ட நெட்வொர்க்கின் லாக் ஐகானை கிளிக் செய்யுங்கள் அல்லது இணைக்கப்பட்ட வைஃபை நெட்வொர்க்கிற்கு அருகில் இருக்கும் 'i' ஐகானைக் கிளிக் செய்யுங்கள். Share Password என்பதை கிளிக் செய்யுங்கள். 

QR ஸ்கேன் அல்லது பாஸ்வேர்ட் மூலம் Wifi உடன் இணைப்பது எப்படி? 

உங்கள் ஸ்மார்ட்போனின் Pin நம்பர் அல்லது பிங்கர் பிரிண்டை உள்ளிட வேண்டும். இப்போது ஒரு புதிய டேபில் QR குறியீடு உடன் wifi பாஸ்வேர்ட் காண்பிக்கப்படும். QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது பாஸ்வேர்டை உள்ளிட்டோ Wifi உடன் இணைந்துகொள்ளலாம். Android 10 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களின் இந்த டிரிக் செயல்படும்.

ஐபோன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி? 

IPhone இல் வைஃபை பாஸ்வேர்டை கண்டறிவது என்பது கொஞ்சம் கடினமான காரியமாக இருக்கிறது. ஆப்பிளின் கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் தான் இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. உங்கள் ஐபோனில் சேவ் செய்யப்பட்ட நெட்வொர்க்குகளின் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது கடினம் தான் என்றாலும் கூட, ஒரு டிரிக் நம்மிடம் உள்ளது. 

இதற்கு ஒரு mac0S PC தேவைப்படும். ஐபோன் பயனர்கள் இதை செய்யுங்கள். உங்கள் ஐபோனில் Settings செல்லவும். iCloud-ஐத் திறக்கவும். Keychain என்ற விருப்பத்தைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும். மீண்டும் Settings சென்று உங்கள் Personal Hotspot-ஐ இயக்கவும். இப்போது உங்கள் மேக்கை உங்கள் பர்சனல் ஹாட்ஸ்பாட் நெட்வொர்க் உடன் இணைக்கவும். 

Spotlight Search-ஐ ஓபன் செய்து (CMD+Space) Keychain Access கிளிக் செய்து Enter-ஐ தட்டவும். இனி ஈசியாக மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிக்கலாம். இப்போது நீங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க விரும்பும் வைஃபை நெட்வொர்க்கைத் தேடலாம். ஒரு பாப்-அப் மெனு திறக்கும், இதில் நெட்வொர்க் விவரங்கள் அனைத்தும் காட்டப்படும். Show Password என்பதை கிளிக் செய்யவும். உங்கள் administrator user credentials விபரங்களை உள்ளிடவும். இப்போது உங்களுக்கான wifi பாஸ்வேர்ட் காண்பிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forgetton WiFi password restart solution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->