பெண்களே உஷார்.. மறைக்கப்பட்ட கேமராக்களை பொது இடத்தில் கண்டறிய இதோ டிப்ஸ்.!
How To Find Hidden Camera in Tamil
ட்ரெயல் ரூம்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்லும்பொழுது பெண்கள் உடை மாற்றுவது பாதுகாப்பானதா என்றால் இன்னமும் சந்தேகத்திற்கிடமான வகையில் தான் இருக்கிறது. அப்படி பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு தரும் வகையில் கேமரா இருக்கிறதா என்பதை கண்டறிய சில வழிகளை இந்த பதிவில் காணலாம்.
ஓட்டல் அறையில் வழக்கத்திற்கு மாறாக ஏதாவது வித்தியாசமான பொருட்கள் இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். சுவரின் மூலையில், கதவுகள், மின்விளக்கு, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், புகைப்பட ஃபிரேம், கண்ணாடி, பூந்தொட்டி, டிஷ்யூ பேப்பர் பெட்டி அனைத்து இடங்களிலும் ரகசிய கேமராவை பொருத்த முடியும்.
பெரும்பாலான அறைகளில் எல்இடி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். எனவே, அறையில் இருக்கும் அனைத்து வெளிச்சத்தையும் முடக்கி விட்டால் கேமராவை கண்டறிய முடியும். யாருக்காவது போன் செய்து பேசிக்கொண்டே அறையை சுற்றி வர வேண்டும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கேமரா அருகில் வந்தாள் சர்வைலன்ஸ் கேமராக்கள் சத்தமிடும்.
அறையில் விளக்குகளை அனைத்து விட்டு ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்து அறையை சுற்றி அடிக்கும் போது ஏதாவது ரெப்லக்ஷன் உருவானால் ரகசிய கேமரா இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இறுதியாக பாத்ரூம் கண்ணாடியில் விரல்களை வைத்து பார்க்க வேண்டும் விரல்களுக்கும் கண்ணாடிக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அங்கே ரகசிய கேமரா இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.
English Summary
How To Find Hidden Camera in Tamil