உங்களின் பழைய ஸ்மார்ட்ஃபோனை வீட்டின் சிசிடிவியாக மாற்றலாம்... எப்படி?! - Seithipunal
Seithipunal


பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், திருடர்கள் அதை குறிவைத்து, நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால், அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. 

சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 ரூபாய் வரை இருக்கும். நீங்களும் இந்த சூழ்நிலையில் இருந்தால், அதற்கான ஒரு வழி இதோ... 

பணம் செலவழிக்காமல் பட்ஜெட் இல்லா சிசிடிவி மூலம் வீட்டைக் கண்காணிக்கலாம். இதற்கு, உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும். 

காஞ்சிபுரத்தில் ஆடைக்குள் இளம்பெண் செய்த வேலை.! சிசிடிவி காட்சியால்  அதிர்ந்த போலீசார்.! - Seithipunal

ஸ்மார்ட்போன் சிசிடிவி

உங்கள் வீட்டிலும் கேமராவை நிறுவ நினைத்தால், உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் Alfred camera செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் புதிய ஸ்மார்ட்போனிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்ற இந்த செயலி பயன்படுகிறது. இந்த செயலியை உங்கள் புதிய மற்றும் பழைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றை கேமராவாகவும், மற்ற ஸ்மார்ட்போனை மானிட்டராகவும் உருவாக்கலாம்.

பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் தற்போது அந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறீர்கள் என்றால், அதன் பிறகு எந்த ஸ்மார்ட்போன் என்ன பாத்திரத்தை வகிக்கப் போகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது மானிட்டர் போன் எது? சிசிடிவி போன் எது? என்பதை தீர்மானியுங்கள். 

உங்க மொபைல்... ரொம்ப SLOW-வா இருக்கா?... இதுதான் காரணம்..! - Seithipunal

பின்னர் உங்கள் வீட்டை எளிதாக கண்காணிக்கக்கூடிய இடத்தில் கேமராவுடன் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும். இந்த செயல்முறையைச் செய்த பிறகு, ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜிங் ஆப்சனையும் அருகிலேயே வைப்பது நல்லது. ஒருவேளை சார்ஜ் இல்லையென்றால் வீட்டை கண்காணிக்க முடியாது.

இதற்குப் பிறகு, நீங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அதிவேக இணையத்துடன் இணைக்க வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் கேமராவை வைக்க வேண்டிய இடத்தை தூசி, வெயில், மழை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make CCtv at home very easy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->