மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? எப்படி சேமிக்கலாம்.?!
How to solve laptop battery charging
ஸ்மார்ட்போனை போல, மடிக்கணினி(லேப்டாப்) யும் இப்போது மிக முக்கியமான சாதனமாகிவிட்டது. கல்லூரி புராஜக்ட், அலுவலக வேலை என்று மடிக்கணினியின் தேவை அதிகரித்துவிட்டது.
மடிக்கணினியின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவது குறித்து பயனர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முழுதும் சார்ஜ் செய்தாலும் கூட நாள் முழுவதும் தாக்குபிடிப்பதில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டும் மடிக்கணினியை பயன்படுத்த முடியும். உங்கள் மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
பேட்டரி சேமிப்பானை மடிக்கணினியில் பணிபுரியும் போது பயன்படுத்துவதால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
பேட்டரியின் ஆயுளை நீடிக்க பேட்டரி சேவர் மிக முக்கியம்.
இந்த பேட்டரி நீண்ட காலம் நீடித்திருக்க திரையின் ஆக்டிவ் கால அளவை குறைக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி மற்றும் டேப் எதுவாக இருந்தாலும், வெளிச்சம் அதிகமாக வைத்து இருந்தால், பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும்.
எனவே, குறைந்த வெளிச்சம், வைத்து பயன்படுத்தினால் உங்கள் மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை நீடிக்கும். காட்சியின் பிரகாசத்தை குறைத்து பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட்போனை போல, மடிக்கணினியைப் பயன்படுத்தும் போது அதிகபடியான புதுப்பிப்பு விகிதம் உங்களுக்கு சிறந்த செயல்திறனை வழங்கும் இதான் மூலம் நல்ல அப்டேட்டை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
அத்துடன், புளுடூத் மற்றும் வைஃபை உள்ளிட்டவை தேவையின்றி ஆக்டிவாக வைத்திருக்கக்கூடாது. மடிக்கணினியை சார்ஜ் செய்யும் பொழுது அசல் சார்ஜரை பயன்படுத்துவது மிக மிக முக்கியம்.
English Summary
How to solve laptop battery charging