செவ்வாய்க்கோளில் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை : விஞ்ஞானிகள் அச்சம்..!  - Seithipunal
Seithipunal


சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960 ம் ஆண்டு துவங்கியது. இதுவரை 50 விண்கலம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதன் முதலில் சோவியத் யூனியன் '1எம்.நம்பர்1' என்ற விண்கலத்தை செவ்வாய் கோளுக்கு ஏவியது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. அதன்பின் 1964ல் அமெரிக்கா 'மரினர்' என்ற விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கோளுக்கு அனுப்பியது. 

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளன. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட தற்போது அங்கு செயல்படும் ரோவர், ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

அதில், இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பைகள் செவ்வாய் கோளில் விடப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நிராகரிக்கப்பட்ட வன்பொருள், செயலற்ற விண்கலம், தரைப்பரப்பில் மோதிய லேண்டர்களும் அடங்கும்.

செவ்வாய் கோளில் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்கு நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலத்தால் சேமிக்கப்பட்டுள்ள பாறை துகள்மாதிரிகளில், இந்த குப்பை பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mars planet harmful trash scientist fear


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->