"நிர்வாண படம்" பரவாமல் தடுக்க புதிய வசதி.. ஃபேஸ்புக்கில் புதிய அப்டேட்..!!
New update on facebook prevent spread nude pictures
உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் பயனாளர்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் ப்ரொபைல் லாக் வசதியை அளித்துள்ளது. இருப்பினும் பயனாளர்களின் புகைப்படத்தை மாற்றி வடிவமைத்து நிர்வான புகைப்படங்களாக சமூக வலைதளத்திலும் இணையதளத்திலும் அதிகம் பகிரப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பேஸ்புக் செயலியில் "Take it down" என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் பயனாளர்களின் புகைப்படங்கள் மற்றும் நிர்வாண படங்கள் இணையதளத்தில் பரவாமல் தடுக்க முடியும்.
மேலும் தவறுதலாக பதிவிடப்பட்ட அல்லது குழந்தை பருவத்தில் பதிவிட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பரவாமல் நீக்கிக் கொள்ளலாம். இந்த வசதியை மெட்டா நிறுவனம் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.
English Summary
New update on facebook prevent spread nude pictures