50MP செல்ஃபி கேமரா, 90W ஃபாஸ்ட் ஜார்ஜின்! அசத்தலான புதிய விவோ அப்டேட்!
New Vivo Camera phone 200 MP Selfie CAM 50 MP
விவோ நிறுவனம், எக்ஸ் 200 ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதற்க்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, விவோ எக்ஸ் 200 அல்ட்ரா என்ற புதிய மாடலை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய அறிமுகம்
* புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களை குறிவைத்து, விவோ எக்ஸ் 200 அல்ட்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ஏப்ரல் மாதத்தில் சீனாவில் முதலில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 மினி போன்ற மாடல்கள் ஏற்கெனவே சீன சந்தையில் கிடைக்கின்றன.
* இவற்றுடன் விவோ எக்ஸ் 200எஸ் என்ற மாடலையும் அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
* சாம்சங் எச்பி-9 (HP-9) சென்சார் கொண்ட 200MP கேமரா.
* சோனி LYT-818 சென்சார் கொண்ட 50MP (Ultra Wide) கேமரா.
* 50MP செல்ஃபி கேமரா, மேலும் சிறப்பான புகைப்பட அனுபவத்துக்கு இரு முன்னணி நிறுவனங்களின் சென்சார்கள்.
* நீண்ட நேரம் பயன்பட 6000mAh பேட்டரி.
* 90W வேக சார்ஜிங் வசதி.
இந்தியாவில் விவோ எக்ஸ் 200 அல்ட்ரா எப்போது வெளியாகும் என்பதை விவோ விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
New Vivo Camera phone 200 MP Selfie CAM 50 MP