"அடடே... இனி பயம் வேண்டாம்" ... புதிய தகவல் பாதுகாப்பு அப்டேட்! வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி.!
No more fear of privacy WhatsApp has introduced new security features
நம் செல்போன்களில் என்னதான் வசதிகள் இருந்தாலும் அவற்றில் இருக்கக்கூடிய தகவல்கள் திருடப்பட்டு விடுமோ என்று ஐயம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பயத்திற்கும் அர்த்தமில்லாமல் இல்லை. ஹேக்கர்கள் சமூக வலைதளங்களின் வழியாக ஊடுருவி நமது தகவல்களை திருடி விடுகின்றனர்.
வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாகவே இருந்தது. இதனை தடுக்கும் வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மட்டன் நிறுவனம் சமீபத்தில் 10 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு இருக்கிறது.
சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பை மீட்டா நிறுவனம் தொடங்கியது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களின் செல்போன்களிலிருக்கும் வைரஸ்கள் அவர்களின் கணக்கை பாதிக்காத வண்ணம் இருக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
செல்போன்களில் இருக்கும் வைரஸ்கள் தனி நபர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் இந்த வைரஸ்கள் பயனர்களின் அனுமதியின்றி அவர்களது செயலிகளையும் தரவுகளையும் அணுக முடியும். மேலும் இவை நமது மொபைல் போன்களிலிருந்து ஸ்பேம் எனப்படும் தவறான மெசேஜ்களை நம் தொடர்பில் உள்ள மத்த இணைப்புகளுக்கும் அனுப்ப இயலும். இவற்றை தடுக்கும் வகையில் புதிய அப்டேட்டுகளில் சிறப்பம்சங்களை செய்திருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
English Summary
No more fear of privacy WhatsApp has introduced new security features