வானியல் அரிய நிகழ்வு!!! ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டிலா!!! நாசா கூறுவது என்ன? - Seithipunal
Seithipunal


சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சூரியனை மையமாக வைத்து  நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவது அனைவரும் அறிந்தவை. சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றும் போது பூமியில் இருந்து நாம் பார்க்கும் பார்வையின் கோணம் அவ்வப்போது ஒரே திரையில் காட்சியளிக்கும். இதில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஏழு கிரகங்கள் அணிவகுப்பு பிப் 28-ம் தேதி தொடங்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதில் கிரக அணிவகுப்பு என்பது பல கிரகங்கள் ஒரே நேரத்தில் சூரியனின் ஒரு பக்கத்தில்   கூடும்போது ஏற்படும் நிகழ்வாகும்.

அதிசய காட்சி:

இதில் கிரகங்கள் நேர்கோட்டில் தோன்றாவிட்டாலும் சூரியன் வானத்தில் பயணிக்கும் வளைந்தப் பாதையான கிரகணத்துடன் அவை பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அதிசய காட்சியளிக்கும். மேலும் இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு  மட்டும் மார்ச் மூன்றாம் தேதி முதல் தெளிவாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன்  கிரகங்களை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் எனவும் புதன், வியாழன், செவ்வாய், வெள்ளி,சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகங்களின் நிலை:

 மேலும் தற்போது, ஸ்மார்ட் ஃபோன்களில் வானியல் தொடுப்பாக  நிறைய செயலிகள் வந்துவிட்ட நிலையில் அதன் மூலமாக கிரகங்களின் நிலைகளை ஆர்வலர்கள் உடனே தெரிந்து கொள்ள முடியும் என நாசா தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி ஆர்வலர் கழகம் இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. மேலும் மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வை காணலாம் என கூறும் அறிவியல் ஆர்வலர்கள் இதேபோன்று 7 கிரக அணிவகுப்பு 2040ல் தான் மறுபடியும் பார்க்க முடியும் என தெரிவிக்கின்றார்கள்.

ஏழு கிரகண அணிவகுப்பு:

இதனால் அறிவியல் ஆர்வலர்கள், அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என நம்பப்படுகிறது. மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஏழு கிரகண அணிவகுப்பு நேர்கோட்டு நிகழ்ச்சியை பார்க்கலாம் என ஆர்வலர்கள்  தெரிவிக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rare astronomical event Are all seven planets in the same straight line What does NASA say


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->