சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விபரங்கள்.! - Seithipunal
Seithipunal


சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 பிளாக்‌ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்த தலைமுறை கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிராசஸர் மூலம் புது ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் பிரிவில் அதிக கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்துள்ளது.

இதன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் SM8550 எனும் மாடல் நம்பரில், கலுயா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது முந்தைய பிராசஸரை விட 25 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டுள்ளது.

இந்த சிப்செட்  கார்டெக்ஸ் X3 கோர் கொண்டுள்ளது. மேலும், இந்த புதிய சிப்செட் நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Galaxy S23 Series Smartphone Details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->